• May 17 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலே..! மகிந்தானந்த வெளியிட்ட தகவல்

Chithra / Jan 23rd 2024, 9:59 am
image

Advertisement

 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களின் கருத்து என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நியமிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் 70% ஆக இருந்த பணவீக்கம் 5% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவியைக் கேட்காதவர் தாம் ஒருவரே எனவும் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலே. மகிந்தானந்த வெளியிட்ட தகவல்  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களின் கருத்து என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நியமிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போதைய ஜனாதிபதியின் கீழ் 70% ஆக இருந்த பணவீக்கம் 5% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், தற்போதைய ஜனாதிபதியிடம் அமைச்சுப் பதவியைக் கேட்காதவர் தாம் ஒருவரே எனவும் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதவிகள் தேவையில்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement