• Jul 29 2026

வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

Chithra / Jul 29th 2026, 12:40 pm
image

 

வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியமுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக்கூடும்.


ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 - 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.


முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான மற்றும் புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.


ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.


முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான மற்றும் புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலைகள் 2.0 - 2.5 மீட்டர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.


வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை  வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியமுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக்கூடும்.ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 - 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான மற்றும் புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான மற்றும் புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலைகள் 2.0 - 2.5 மீட்டர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement