மலைநாட்டு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஹட்டன் செனன் பகுதியில் பிரதான வீதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பிரதான வீதியில் விழுந்த மரங்களை ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளும், பிரதேச மக்களும் இணைந்து வெட்டி அகற்றினர். எனினும், இந்த வீதியினூடான போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள டிக்கோயா பகுதியில் பல பெரிய மரங்கள் பிரதான வீதியில் முறிந்து விழுந்துள்ளது. வீதியோரங்களில் அமைந்துள்ள பல மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
ஹட்டன் வனராஜா தோட்டப்பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், மூன்று வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறை சுவர்கள் என்பன சேதமடைந்துள்ளன.
தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக, மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் விழுந்துள்ளதன் விளைவாக ஹட்டன், நோர்வூட், கொட்டகலை மற்றும் நோட்டன்பிரிடஜ் ஆகிய பகுதிகளில் முழுமையான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுந்ததால், இன்று அதிகாலை நுவரெலியா-பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலையால் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலி, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று காலை 10.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்று, கனமழையால் முறிந்து விழும் மரங்கள் இருளில் மூழ்கிய மலையகம்; 04 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை மலைநாட்டு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை ஹட்டன் செனன் பகுதியில் பிரதான வீதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் பிரதான வீதியில் விழுந்த மரங்களை ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளும், பிரதேச மக்களும் இணைந்து வெட்டி அகற்றினர். எனினும், இந்த வீதியினூடான போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள டிக்கோயா பகுதியில் பல பெரிய மரங்கள் பிரதான வீதியில் முறிந்து விழுந்துள்ளது. வீதியோரங்களில் அமைந்துள்ள பல மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் சேதமடைந்துள்ளன.ஹட்டன் வனராஜா தோட்டப்பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், மூன்று வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறை சுவர்கள் என்பன சேதமடைந்துள்ளன.தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக, மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் விழுந்துள்ளதன் விளைவாக ஹட்டன், நோர்வூட், கொட்டகலை மற்றும் நோட்டன்பிரிடஜ் ஆகிய பகுதிகளில் முழுமையான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.மின் தடை ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதேவேளை நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுந்ததால், இன்று அதிகாலை நுவரெலியா-பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலையால் பிரதான வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.காலி, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுஇந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று காலை 10.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.