• Nov 22 2024

பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு...! கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / May 5th 2024, 7:21 pm
image


பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் 2.5 தொடக்கம் 3.0 மற்றும் அலையின் கால அளவு 12 தொடக்கம் 16 வினாடிகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும்.

எனவே கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு. கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் 2.5 தொடக்கம் 3.0 மற்றும் அலையின் கால அளவு 12 தொடக்கம் 16 வினாடிகள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையில் கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும்.எனவே கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement