ரணில் விக்கிரமசிங்கவினால் இணக்கப்பாடு காணப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை 2025 ஆம் ஆண்டிலும் எந்தவித மாற்றமும் இன்றி பேணுவதற்கு தற்போதைய அரசாங்கமும் ஒப்புதல் கண்டுள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் உருவாகி, புதிய பாராளுமன்றம் கூடி புதிய புதிய முறையில் செயற்பட முயற்சிப்பதாகத் தெரிகிறது.
ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதுவரை நாம் பார்த்திராத பாராளுமன்ற அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
ஜனாதிபதி பதவியும் பெரும்பான்மை பலமும் ஒரு கட்சிக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
அதற்கிணங்க தேசிய மக்கள் சக்தி நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதிகளுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் அரசாங்கத்தை முன்னெடுக்கும் என நம்புகின்றோம்.
ஒரு குறிப்பிட்ட கட்சி மக்களுக்கு முன்வைக்கும் வேலைத்திட்டத்திற்கு பெரும்பான்மையான மக்கள் உடன்படுவதே மக்கள் ஆணையாகும்.
இந்த ஆணைக்கு வெளியே செயல்பட யாருக்கும் அதிகாரம் இல்லை.
இதன் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி முன்வைத்த வாக்குறுதிகளை அமுல்படுத்தப்படும் என நம்புகிறோம்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி முன்வைத்த வாக்குறுதிப் பத்திரத்திற்கு புறம்பாக சில செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிகிறது.
எவ்வாறாயினும், அரசாங்கம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் பின்னர் அதி கூடிய வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும்.
இதன்படி, மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் இருந்து அரசாங்கம் விலகும் போது, அதனை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது. 2022 இல் நடந்த போராட்டமும் 2024 இல் ஆட்சி அதிகாரத்தை பெற தேசிய மக்கள் சக்திக்கு ஏதுவாக அமைந்தது.
எனவே போராட்டத்தின் மூலம் வெளிப்பட்ட பொருளாதார விடயங்கள் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதுடன் தொடர்புடையது.
அதற்கிணங்க தேசிய மக்கள் சக்தி நாட்டின் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுகளை கொண்டுவரும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிய பொருளாதார தீர்வை கொண்டுவரும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இல்லை என்பதை காண்கிறோம்.
சர்வதேச நாணய நிதியம் முதலில் ஒப்புக்கொண்டபடி 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு வழங்கவுள்ளது. ஆனால் தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பின்னர் 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவோம் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க சிறிது காலம் பிடிக்கும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், வரவு செலவுத் திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏலவே இணக்கப்பாடு காணப்பட்ட சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு ஏற்ப தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் சேவை நிலைத்தன்மையை பேணுகிறதா என்பதை சர்வதேச நாணய நிதியம் ஆராய வேண்டிய தேவை இருப்பதை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் அறிக்கைகளிலிருந்து நாம் காணலாம்.
இதனால் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள உடன்படிக்கைகளில் இருந்து தற்போதைய அரசாங்கம் வெளியேற முடியாத நிலை தோன்றியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரச் செயற்பாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச நாணய நிதியத்தின் மாதிரிக்குள் நகரும். தற்போதைய அரசாங்கத்தால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை.
இதனால், 2025 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக புதிய விடயங்களைச் செய்து, புரட்சிகரமான வழியில் பயணிக்க தற்போதைய அரசாங்கத்தால் முடியாத காரியம்.
அதேபோல், தேசிய மக்கள் சக்தி மக்கள் ஆணையைப் பெற முன்வைத்த கருத்துக்களும், தற்போதைய பொருளாதாரத் திட்டமும் ஒன்றல்ல இரட்டை நிலைப்பாடானது என்பது தெளிவாகிறது.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை 2025 ஆம் ஆண்டிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதே வழியில் பேண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின்படி 2025 ஆம் ஆண்டுக்கான முழு வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் தயாரிக்குமானால், அது ரணில் விக்ரமசிங்க இல்லாத ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார திட்டமாக அமையும்.
மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நாட்டில் புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் கொண்டுவரும் என்றே அரசை மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தற்போதைய நிலவரப்படி புதிய பொருளாதாரக் கொள்கைகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது.
தேசிய மக்கள் சக்தியு அரசாங்கமும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவின் கொள்கையையே நாட்டுக்கு முன்வைக்கும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தங்களை மாற்றியமைப்பதாக தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தி அறிவித்தது.
ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை தொடர்ச்சியையே எந்த மாற்றமும் இல்லாது தேசிய மக்கள் சக்தியும் பின்பற்றி வருகிறது.
இது மக்கள் ஆணைக்கு எதிரான செயல்பாடாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏலவே இணக்கப்பாடு காணப்பட்ட கொள்கைகளை அவ்வாறே முன்கொண்டு செல்வோம் என தேசிய மக்கள் சக்தியும் தற்போது கூறிவருகிறது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நியமணத்துக்கு மிகவும் பொருத்தமானவர்களை கட்சியின் தலைவர்கள் நியமிப்பார்.
அத்துடன், சமூகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், கொள்கை பரப்பில் பெரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இவ்வாறான விடயங்களில் அறிவு மிக்கவர்கள் கொண்ட பாராளுமன்றம் அமைய வேண்டும். எனவே மிகவும் பொருத்தமான 4 பேருக்கு இந்த தேசிய பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும்.
எதிர்க்கட்சிக்கு ஏற்ற திறமையானவர்களை இந்த தருணத்தில் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என பேராசிரியர் சரித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
2022 இல் நடந்த போராட்டம் : 2024 இல் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தை பெற ஏதுவானது - சரித ஹேரத் ரணில் விக்கிரமசிங்கவினால் இணக்கப்பாடு காணப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை 2025 ஆம் ஆண்டிலும் எந்தவித மாற்றமும் இன்றி பேணுவதற்கு தற்போதைய அரசாங்கமும் ஒப்புதல் கண்டுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் உருவாகி, புதிய பாராளுமன்றம் கூடி புதிய புதிய முறையில் செயற்பட முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை நாம் பார்த்திராத பாராளுமன்ற அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. ஜனாதிபதி பதவியும் பெரும்பான்மை பலமும் ஒரு கட்சிக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதற்கிணங்க தேசிய மக்கள் சக்தி நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதிகளுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் அரசாங்கத்தை முன்னெடுக்கும் என நம்புகின்றோம்.ஒரு குறிப்பிட்ட கட்சி மக்களுக்கு முன்வைக்கும் வேலைத்திட்டத்திற்கு பெரும்பான்மையான மக்கள் உடன்படுவதே மக்கள் ஆணையாகும். இந்த ஆணைக்கு வெளியே செயல்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. இதன் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி முன்வைத்த வாக்குறுதிகளை அமுல்படுத்தப்படும் என நம்புகிறோம்.ஆனால், தேசிய மக்கள் சக்தி முன்வைத்த வாக்குறுதிப் பத்திரத்திற்கு புறம்பாக சில செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், அரசாங்கம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையின் பின்னர் அதி கூடிய வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். இதன்படி, மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் இருந்து அரசாங்கம் விலகும் போது, அதனை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுகின்றது.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது. 2022 இல் நடந்த போராட்டமும் 2024 இல் ஆட்சி அதிகாரத்தை பெற தேசிய மக்கள் சக்திக்கு ஏதுவாக அமைந்தது. எனவே போராட்டத்தின் மூலம் வெளிப்பட்ட பொருளாதார விடயங்கள் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதுடன் தொடர்புடையது. அதற்கிணங்க தேசிய மக்கள் சக்தி நாட்டின் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுகளை கொண்டுவரும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிய பொருளாதார தீர்வை கொண்டுவரும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இல்லை என்பதை காண்கிறோம்.சர்வதேச நாணய நிதியம் முதலில் ஒப்புக்கொண்டபடி 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு வழங்கவுள்ளது. ஆனால் தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பின்னர் 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவோம் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். முதலில் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க சிறிது காலம் பிடிக்கும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். இதன் பிரகாரம், வரவு செலவுத் திட்டத்தை விரைவில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஏலவே இணக்கப்பாடு காணப்பட்ட சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு ஏற்ப தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் சேவை நிலைத்தன்மையை பேணுகிறதா என்பதை சர்வதேச நாணய நிதியம் ஆராய வேண்டிய தேவை இருப்பதை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் அறிக்கைகளிலிருந்து நாம் காணலாம். இதனால் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள உடன்படிக்கைகளில் இருந்து தற்போதைய அரசாங்கம் வெளியேற முடியாத நிலை தோன்றியுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பிரகாரம், 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரச் செயற்பாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச நாணய நிதியத்தின் மாதிரிக்குள் நகரும். தற்போதைய அரசாங்கத்தால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை.இதனால், 2025 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக புதிய விடயங்களைச் செய்து, புரட்சிகரமான வழியில் பயணிக்க தற்போதைய அரசாங்கத்தால் முடியாத காரியம். அதேபோல், தேசிய மக்கள் சக்தி மக்கள் ஆணையைப் பெற முன்வைத்த கருத்துக்களும், தற்போதைய பொருளாதாரத் திட்டமும் ஒன்றல்ல இரட்டை நிலைப்பாடானது என்பது தெளிவாகிறது.அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை 2025 ஆம் ஆண்டிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதே வழியில் பேண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின்படி 2025 ஆம் ஆண்டுக்கான முழு வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் தயாரிக்குமானால், அது ரணில் விக்ரமசிங்க இல்லாத ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார திட்டமாக அமையும். மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நாட்டில் புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் கொண்டுவரும் என்றே அரசை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி புதிய பொருளாதாரக் கொள்கைகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது.தேசிய மக்கள் சக்தியு அரசாங்கமும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவின் கொள்கையையே நாட்டுக்கு முன்வைக்கும். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தங்களை மாற்றியமைப்பதாக தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தி அறிவித்தது. ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை தொடர்ச்சியையே எந்த மாற்றமும் இல்லாது தேசிய மக்கள் சக்தியும் பின்பற்றி வருகிறது. இது மக்கள் ஆணைக்கு எதிரான செயல்பாடாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏலவே இணக்கப்பாடு காணப்பட்ட கொள்கைகளை அவ்வாறே முன்கொண்டு செல்வோம் என தேசிய மக்கள் சக்தியும் தற்போது கூறிவருகிறது.அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நியமணத்துக்கு மிகவும் பொருத்தமானவர்களை கட்சியின் தலைவர்கள் நியமிப்பார். அத்துடன், சமூகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், கொள்கை பரப்பில் பெரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவ்வாறான விடயங்களில் அறிவு மிக்கவர்கள் கொண்ட பாராளுமன்றம் அமைய வேண்டும். எனவே மிகவும் பொருத்தமான 4 பேருக்கு இந்த தேசிய பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும். எதிர்க்கட்சிக்கு ஏற்ற திறமையானவர்களை இந்த தருணத்தில் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என பேராசிரியர் சரித ஹேரத் மேலும் தெரிவித்தார்.