• Dec 14 2024

திருமலையில் கனமழை காரணமாக 9,035 பேர் பாதிப்பு..!

Sharmi / Nov 28th 2024, 2:23 pm
image

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக  3071 குடும்பங்களைச் சேர்ந்த 9035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

172 குடும்பங்களைச் சேர்ந்த 419 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 871 குடும்பங்களைச் சேர்ந்த 3126 பேர் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். 

மேலும் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதென திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.

சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேரும், மூதூர் பிரதேச செயலகத்தில் 1229 குடும்பங்களைச் சேர்ந்த 3452 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 298 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 434 குடும்பங்களைச் சேர்ந்த 1698 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 833 குடும்பத்தைச் சேர்ந்த 2118 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 81 குடும்பத்தைச் சேர்ந்த 207 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் 60 குடும்பத்தைச் சேர்ந்த 238 பேரும், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 13 குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரும், பதவிஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவில் 06 குடும்பத்தைச் சேர்ந்த 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேருவில பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 48 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேர் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும், ஆதி கோணேஸ்வரா பாடசாலையிலும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேர் பாரதிபுரம் பாடசாலையிலும், முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்திலும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 59 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலிலும், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 08 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் விவேகானந்தா பாலர் பாடசாலையிலும், பதவிஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 05 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் கவன்திஸ்ஸபுர பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகளை அமைத்து கொடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.


திருமலையில் கனமழை காரணமாக 9,035 பேர் பாதிப்பு. திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக  3071 குடும்பங்களைச் சேர்ந்த 9035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.172 குடும்பங்களைச் சேர்ந்த 419 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 871 குடும்பங்களைச் சேர்ந்த 3126 பேர் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மேலும் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதென திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேரும், மூதூர் பிரதேச செயலகத்தில் 1229 குடும்பங்களைச் சேர்ந்த 3452 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 298 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொறவெவ பிரதேச செயலகப் பிரிவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 434 குடும்பங்களைச் சேர்ந்த 1698 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 833 குடும்பத்தைச் சேர்ந்த 2118 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 81 குடும்பத்தைச் சேர்ந்த 207 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவில் 60 குடும்பத்தைச் சேர்ந்த 238 பேரும், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 13 குடும்பத்தைச் சேர்ந்த 40 பேரும், பதவிஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவில் 06 குடும்பத்தைச் சேர்ந்த 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சேருவில பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 48 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேர் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும், ஆதி கோணேஸ்வரா பாடசாலையிலும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த 82 பேர் பாரதிபுரம் பாடசாலையிலும், முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்திலும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 59 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலிலும், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 08 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் விவேகானந்தா பாலர் பாடசாலையிலும், பதவிஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 05 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் கவன்திஸ்ஸபுர பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகளை அமைத்து கொடுத்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement