• May 19 2025

மாணவன் நீரில் மூழ்கி மரணம்! வாழைச்சேனையில் துயரம்

Chithra / May 19th 2025, 7:28 am
image


பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில்   இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும்போதே மாணவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன் நீரில் மூழ்கி மரணம் வாழைச்சேனையில் துயரம் பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில்   இடம்பெற்றுள்ளது.நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும்போதே மாணவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.இவ்வாறு மரணமடைந்தவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement