• Sep 20 2024

ரயில் பிளாட்பாரத்தில் சிக்கிய மாணவி!! சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்!

crownson / Dec 9th 2022, 2:05 pm
image

Advertisement

 புகையிரதத்திலிருந்து இருந்து இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து புகையிரதத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்ட மாணவி சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த  20 வயதான கல்லூரி மாணவி சசிகலா.

இவர் நாள்தோறும் தனது ஊரில் இருந்து கல்லூரிக்கு புகையிரதம் மூலம் சென்று வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் டிசம்பர் 7ஆம் திகதி விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா புகையிரத நிலையத்தில் குண்டூர்- ராயகடா பாசஞ்சர் ரயிலில் பயணித்த மாணவி சசிகலா அதில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.

அப்போது கால் தவறி விழுந்து புகையிரதத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்டார்.

மாணவியின் இடுப்பு பகுதி புகையிரதத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் மத்தியில் சிக்கியது.

இதனை கவனித்த ரயில்வே போலீசார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தினர்.

பின்னர் இரு மணி நேரம் போராடிஇ பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி சசிகலா பரிதபாமாக உயிரிழந்துள்ளார்.

மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளதாகவும் இதில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாணவியின் எதிர்பாராத மரணம் அப்பகுதியினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் பிளாட்பாரத்தில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்  புகையிரதத்திலிருந்து இருந்து இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து புகையிரதத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்ட மாணவி சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த  20 வயதான கல்லூரி மாணவி சசிகலா. இவர் நாள்தோறும் தனது ஊரில் இருந்து கல்லூரிக்கு புகையிரதம் மூலம் சென்று வருகிறார்.இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் டிசம்பர் 7ஆம் திகதி விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா புகையிரத நிலையத்தில் குண்டூர்- ராயகடா பாசஞ்சர் ரயிலில் பயணித்த மாணவி சசிகலா அதில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்து புகையிரதத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்டார். மாணவியின் இடுப்பு பகுதி புகையிரதத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் மத்தியில் சிக்கியது.இதனை கவனித்த ரயில்வே போலீசார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். பின்னர் இரு மணி நேரம் போராடிஇ பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி சசிகலா பரிதபாமாக உயிரிழந்துள்ளார். மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளதாகவும் இதில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் எதிர்பாராத மரணம் அப்பகுதியினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement