• May 18 2024

மழைக் குளிரால் உயிருக்கு போராடும் கால்நடைகள் - களத்தில் குதித்த மருத்துவர்கள்

harsha / Dec 9th 2022, 2:07 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அவ்வந்த நிணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த பாதிப்புக்கள் தொடர்பில், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் என பலரும் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன் குறிப்பிடுகையில், குறித்த பாதிப்பு தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்ட்டு உரிய முறையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இவ்வாறான காலநிலையின்போது, கால்நடைகளை அவதானமாக வைத்திருக்குமாறும் தெரிவித்தார்.

முதல் கட்டமாக, கால்நடைகளிற்கு அண்மித்து தீமூட்டி சூட்டினை வழங்குமாறும், பாதிப்புக்கள் ஏற்படின் கால்நடை வைத்தியர்களை அணுகுமாறும் தெரிவித்தார்.

மழைக் குளிரால் உயிருக்கு போராடும் கால்நடைகள் - களத்தில் குதித்த மருத்துவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அவ்வந்த நிணைக்களங்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சீரற்ற வானிலையால் உயிருக்கு போராடும் கால்நடைகளிற்கு கால்நடை வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டது.இதேவேளை குறித்த பாதிப்புக்கள் தொடர்பில், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் என பலரும் கள ஆய்வு மேற்கொண்டனர்.இதன்போது, கருத்து தெரிவித்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ். கெளரிதிலகன் குறிப்பிடுகையில், குறித்த பாதிப்பு தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்ட்டு உரிய முறையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இவ்வாறான காலநிலையின்போது, கால்நடைகளை அவதானமாக வைத்திருக்குமாறும் தெரிவித்தார்.முதல் கட்டமாக, கால்நடைகளிற்கு அண்மித்து தீமூட்டி சூட்டினை வழங்குமாறும், பாதிப்புக்கள் ஏற்படின் கால்நடை வைத்தியர்களை அணுகுமாறும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement