• Sep 19 2024

மட்டக்களப்பில் ஒன்றுதிரண்ட மாணவர்கள்...! காண்போரை கவர்ந்த நடைபவனி...!samugammedia

Sharmi / Oct 21st 2023, 11:43 am
image

Advertisement

மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் 78வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்றைய தினம்(21)  மாபெரும் நடைபவனி நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் நல்லையா மாஸ்டரினால்  உருவாக்கப்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயமானது மட்டக்களப்பு நகரில் பிரதானமான ஆரம்ப பிரிவு பாடசாலையாக இருந்து வருகின்றது.

இந்த பாடசாலையின் 78வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் இன்றைய தினம் பாடசாலையிலிருந்து மாபெரும் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் த.அருமைத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,மாணவர்கள்,பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இந்த நடைபவனியானது இயற்கையினை பாதுகாப்போம் என்னும் வகையில் நடைபெற்றது.

நடைபவனியானது புகையிரத வீதி, பார்வீதி, திருமலை வீதியூடாக வந்து மீண்டும் புகையிரத நிலைய வீதியூடாக பாடசாலையினை வந்தடைந்தது.

பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் தாங்கியதாக இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




மட்டக்களப்பில் ஒன்றுதிரண்ட மாணவர்கள். காண்போரை கவர்ந்த நடைபவனி.samugammedia மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் 78வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்றைய தினம்(21)  மாபெரும் நடைபவனி நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் நல்லையா மாஸ்டரினால்  உருவாக்கப்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயமானது மட்டக்களப்பு நகரில் பிரதானமான ஆரம்ப பிரிவு பாடசாலையாக இருந்து வருகின்றது.இந்த பாடசாலையின் 78வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் இன்றைய தினம் பாடசாலையிலிருந்து மாபெரும் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.பாடசாலையின் அதிபர் த.அருமைத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,மாணவர்கள்,பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.இந்த நடைபவனியானது இயற்கையினை பாதுகாப்போம் என்னும் வகையில் நடைபெற்றது.நடைபவனியானது புகையிரத வீதி, பார்வீதி, திருமலை வீதியூடாக வந்து மீண்டும் புகையிரத நிலைய வீதியூடாக பாடசாலையினை வந்தடைந்தது.பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் தாங்கியதாக இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement