• Apr 02 2025

யாழில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரின் திடீர் நடவடிக்கை..!

Sharmi / Apr 1st 2025, 3:38 pm
image

வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று காலை 10 மணியளவில் யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டு இடங்களை எல்லைப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், தமது பிரதேசத்தில் தமது வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் எனவும் வளங்களை கொள்ளையடிப்பவர்களை தெரிந்தால் அவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும், குறிப்பாக மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் தாம் எந்த வித அனுமதியும் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

ஏனெனில் அவ் எல்லைகள் அதிவிசேட எல்லைகளுக்கு உட்பட்டு இருப்பதால் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பது கடினம் எனவும் கூறியுள்ளனர்.

தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர்,  "உங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருப்போரை வெளியில் எழுப்புவதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றதா என வினவினார். 

இதன்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மக்களை பயப்பிட வேண்டாம் எனவும் அப்படிப்பட்ட செயல்கள் நாம் செய்யப்போவது இல்லை. தாம் மெல்ல மெல்ல தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை விடுவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கியமாக தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை முக்கிய கட்டடங்கள் கட்டுவதற்கு தம்மை உரிய முறையில் நாடினால் தாம் அனுமதி கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.



யாழில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரின் திடீர் நடவடிக்கை. வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று காலை 10 மணியளவில் யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டு இடங்களை எல்லைப்படுத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், தமது பிரதேசத்தில் தமது வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் எனவும் வளங்களை கொள்ளையடிப்பவர்களை தெரிந்தால் அவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலும் தெரிவிக்கையில்,தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும், குறிப்பாக மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் தாம் எந்த வித அனுமதியும் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.ஏனெனில் அவ் எல்லைகள் அதிவிசேட எல்லைகளுக்கு உட்பட்டு இருப்பதால் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பது கடினம் எனவும் கூறியுள்ளனர்.தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர்,  "உங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருப்போரை வெளியில் எழுப்புவதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றதா என வினவினார். இதன்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மக்களை பயப்பிட வேண்டாம் எனவும் அப்படிப்பட்ட செயல்கள் நாம் செய்யப்போவது இல்லை. தாம் மெல்ல மெல்ல தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை விடுவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.முக்கியமாக தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை முக்கிய கட்டடங்கள் கட்டுவதற்கு தம்மை உரிய முறையில் நாடினால் தாம் அனுமதி கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement