• Apr 02 2025

பொரளை துப்பாக்கி சூடு: 11 வருடங்களுக்கு பின் பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!

Chithra / Apr 1st 2025, 3:25 pm
image

 

2014 ஆம் ஆண்டு பொரளையில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எஃப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, இந்த மரண தண்டனை உத்தரவினை பிறப்பித்தார்.

மேலும்,தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜெயநாத் உட்பட மூன்று பிரதிவாதிகளை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

2014 ஆகஸ்ட் 01 ஆம் திகதி பொரளை, வனாதமுல்ல பகுதியில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்திற்குள் ஹெட்டியாராச்சிகே துமிந்த என்ற நபரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு குற்றவாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பொரளை துப்பாக்கி சூடு: 11 வருடங்களுக்கு பின் பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை  2014 ஆம் ஆண்டு பொரளையில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எஃப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, இந்த மரண தண்டனை உத்தரவினை பிறப்பித்தார்.மேலும்,தெமட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ரவி ஜெயநாத் உட்பட மூன்று பிரதிவாதிகளை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.2014 ஆகஸ்ட் 01 ஆம் திகதி பொரளை, வனாதமுல்ல பகுதியில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்திற்குள் ஹெட்டியாராச்சிகே துமிந்த என்ற நபரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு குற்றவாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement