• Apr 02 2025

சண்டிலிப்பாயில் இடம்பெற்ற உலக நாடக தின விழா..!

Sharmi / Apr 1st 2025, 3:21 pm
image

உலக நாடக தினத்தை முன்னிட்டு நாடக ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம்  நினைவாக சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தினால் உலக நாடக தின  விழா சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில்  நடைபெற்றது .

இதன் பொழுது குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது நினைவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி இடம்பெற்றது.

தொடர்ந்து நினைவுரையினை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.ரதிதரன் நிகழ்த்தினார் 

 தொடர்ந்து நாடக அரங்க கல்லூரியின் "தான் விரும்பாத் தியாகி" சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலைய மாணவர்களின் "கற்று உணர்வோம்" கூத்தாட்டு அவைக் கழகத்தின்" பட்டறிவு " ,ரவர் நாடக அரங்க கற்கை நெறி முதலாம் வருட மாணவர்களின் "வசந்தன் கூத்து" , செம்முகம் ஆற்றுகை குழுவின் எங்கே எங்கே குடை எங்கே ,வடலியடைப்பு கலைவானி கலைமன்றத்தின் வார்த்தைகளற்ற நடன நாடகம் , சண் நாடக குழுவின் முட்டை ஆகிய யாழ் மாவட்டத்தின் பல்வேறுபட்ட அரங்க ஆளுமைகளின்  7 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.

இதன் பொழுது சண்டிலிப்பாய் கலாசார உத்தியோகத்தர் யாழினி யோகஸ்வரன் ,யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , விரிவுரையாளர்கள் , நாடக ஆசிரியர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சண்டிலிப்பாயில் இடம்பெற்ற உலக நாடக தின விழா. உலக நாடக தினத்தை முன்னிட்டு நாடக ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம்  நினைவாக சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தினால் உலக நாடக தின  விழா சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில்  நடைபெற்றது .இதன் பொழுது குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது நினைவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து நினைவுரையினை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.ரதிதரன் நிகழ்த்தினார்  தொடர்ந்து நாடக அரங்க கல்லூரியின் "தான் விரும்பாத் தியாகி" சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலைய மாணவர்களின் "கற்று உணர்வோம்" கூத்தாட்டு அவைக் கழகத்தின்" பட்டறிவு " ,ரவர் நாடக அரங்க கற்கை நெறி முதலாம் வருட மாணவர்களின் "வசந்தன் கூத்து" , செம்முகம் ஆற்றுகை குழுவின் எங்கே எங்கே குடை எங்கே ,வடலியடைப்பு கலைவானி கலைமன்றத்தின் வார்த்தைகளற்ற நடன நாடகம் , சண் நாடக குழுவின் முட்டை ஆகிய யாழ் மாவட்டத்தின் பல்வேறுபட்ட அரங்க ஆளுமைகளின்  7 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.இதன் பொழுது சண்டிலிப்பாய் கலாசார உத்தியோகத்தர் யாழினி யோகஸ்வரன் ,யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , விரிவுரையாளர்கள் , நாடக ஆசிரியர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement