கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வசமுள்ள காணி தொடர்பில் கேட்ட போதே அவர் இன்று (01) இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில்அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களது காணிகள் பல விடுவிக்கப்படாது இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றது.
அந்தவகையில், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 653.65 ஏக்கரும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 180.38 ஏக்கரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 116.61ஏக்கரும், பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் 248.18 ஏக்கரும் என 1209.22 ஏக்கர் காணி இராணுவம் வசமுள்ளது.
மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதே காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வேண்டுகோள் எனவும் அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினர் வசம். கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.இராணுவத்தினர் வசமுள்ள காணி தொடர்பில் கேட்ட போதே அவர் இன்று (01) இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களது காணிகள் பல விடுவிக்கப்படாது இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றது. அந்தவகையில், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 653.65 ஏக்கரும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 180.38 ஏக்கரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 116.61ஏக்கரும், பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் 248.18 ஏக்கரும் என 1209.22 ஏக்கர் காணி இராணுவம் வசமுள்ளது.மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர். மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதே காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வேண்டுகோள் எனவும் அவர் தெரிவித்தார்.