• Apr 02 2025

மாகாணசபை தேர்தல்கள் இந்தவருடம் இல்லை! அமைச்சர் நளிந்த

Chithra / Apr 1st 2025, 3:46 pm
image

 

மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால் ஆறுமாதத்திற்குள் இலங்கை மூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தொடர்ந்து தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது, அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலுடன் பிரதானமான தேர்தல்கள் முடிவிற்கு வரும், மாகாணசபை தேர்தல்களை மாத்திரம் நடத்தவேண்டும்,

சட்டங்களை மாற்றவேண்டியுள்ளதாலும்,நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபை தேர்தல்களை இந்த வருடம் நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்கள் இந்தவருடம் இல்லை அமைச்சர் நளிந்த  மாகாண சபை தேர்தல் இந்த வருடம் இடம்பெறாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்றால் ஆறுமாதத்திற்குள் இலங்கை மூன்று தேர்தல்களை சந்தித்திருக்கும் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மற்றுமொரு தேர்தல் சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் தொடர்ந்து தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்க முடியாது, அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி தேர்தலுடன் பிரதானமான தேர்தல்கள் முடிவிற்கு வரும், மாகாணசபை தேர்தல்களை மாத்திரம் நடத்தவேண்டும்,சட்டங்களை மாற்றவேண்டியுள்ளதாலும்,நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபை தேர்தல்களை இந்த வருடம் நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement