• Nov 28 2024

திடீரென இரத்து செய்யப்படும் விமானங்கள்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Chithra / Feb 28th 2024, 9:11 am
image

 

விமானங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமாகி வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 7 விமானங்களை வாங்குவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெறுவதற்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று (27) கூறியுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் 7 விமானங்களில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் இரத்து செய்யப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

26 ஆம் திகதி மூன்று விமானங்கள் இரத்து செய்யப்படுவதாக பயணிகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 27 விமானங்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 20 விமானங்கள் மட்டுமே உள்ளதாக விமான நிலைய சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

திடீரென இரத்து செய்யப்படும் விமானங்கள்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி  விமானங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமாகி வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.ஏற்கனவே 7 விமானங்களை வாங்குவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெறுவதற்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று (27) கூறியுள்ளார்.மேலும், நேற்றைய தினம் 7 விமானங்களில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் இரத்து செய்யப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.26 ஆம் திகதி மூன்று விமானங்கள் இரத்து செய்யப்படுவதாக பயணிகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 27 விமானங்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 20 விமானங்கள் மட்டுமே உள்ளதாக விமான நிலைய சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement