• Feb 11 2026

திடீரென மாறும் வானிலை; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Chithra / Jan 12th 2026, 7:52 am
image


நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

  

இதன்படி வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 

அத்துடன் வடமேல், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

மேலும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 25 - 35 km  வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து வடகிழக்குத் திசையினூடாக காற்று வீசும்.  


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


திடீரென மாறும் வானிலை; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   இதன்படி வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  அத்துடன் வடமேல், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மேலும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 25 - 35 km  வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து வடகிழக்குத் திசையினூடாக காற்று வீசும்.  இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement