• Jan 13 2026

ஹரிணியை நீக்கவே முடியாது! அமைச்சர் பிமல் பதிலடி

Chithra / Jan 12th 2026, 7:53 am
image


பிரதமர் பதவியிலிருந்தோ அல்லது கல்வி அமைச்சுப் பதவியிலிருந்தோ கலாநிதி ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அவர் இரு பதவிகளிலும் தொடர்ந்து செயற்படுவார் என்றும், அரசுக்குள் இது குறித்து எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும், பிரதமரின் தலைமையில் அரசின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

கல்வித் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் என்றும், அதற்காக ஹரிணி அமரசூரியவின் தலைமை அவசியமானதாகும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹரிணியை நீக்கவே முடியாது அமைச்சர் பிமல் பதிலடி பிரதமர் பதவியிலிருந்தோ அல்லது கல்வி அமைச்சுப் பதவியிலிருந்தோ கலாநிதி ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.அவர் இரு பதவிகளிலும் தொடர்ந்து செயற்படுவார் என்றும், அரசுக்குள் இது குறித்து எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும், பிரதமரின் தலைமையில் அரசின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.கல்வித் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் என்றும், அதற்காக ஹரிணி அமரசூரியவின் தலைமை அவசியமானதாகும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement