• Jan 13 2026

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Chithra / Jan 12th 2026, 7:55 am
image

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தமையினால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது.

இந்நிலையில் உருவான டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன்துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது.

இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் காங்கேசன்துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இதையடுத்து நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது.

இந்த முறை நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தமையினால் கடலில் சீற்றம் மற்றும் கன மழை பெய்தது.இந்நிலையில் உருவான டிட்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன்துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது.இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் காங்கேசன்துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.இதையடுத்து நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது.இந்த முறை நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement