வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்த, கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம் - பொலிஸார் தீவிர விசாரணை வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்த, கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய மனோகரன் பொன்னையா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த வாகன சாரதி, உடனடியாக அவரை பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.