சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டவனை மல்சிரிபுர பகுதியைச் சேர்ந்த 73 வயது வயோதிபர் ஒருவர் நேற்றையதினம் இரவு சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்று தரிசித்த பின் இன்று காலை மலைஉச்சியில் இருந்து திரும்பி வந்த வேளையில் ஊசிமலை பகுதியில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி நகருக்கு தூக்கி வந்து பின்னர் அங்கு இருந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித்த போதும் அவர் இடையிலேயே உயிரிழந்துள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவரது சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் வயோதிபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
சிவனொளிபாதமலை தரிசனத்தில் ஈடுபட்ட வயோதிபர் திடீர் மரணம். பக்தர்கள் அதிர்ச்சி.samugammedia சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வட்டவனை மல்சிரிபுர பகுதியைச் சேர்ந்த 73 வயது வயோதிபர் ஒருவர் நேற்றையதினம் இரவு சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்று தரிசித்த பின் இன்று காலை மலைஉச்சியில் இருந்து திரும்பி வந்த வேளையில் ஊசிமலை பகுதியில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி நகருக்கு தூக்கி வந்து பின்னர் அங்கு இருந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித்த போதும் அவர் இடையிலேயே உயிரிழந்துள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.அவரது சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனையின் பின்னர் வயோதிபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.