நுவரெலியா ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் எவருக்கும் உயிரிழப்போ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து — பாரிய சொத்து சேதம் நுவரெலியா ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் எவருக்கும் உயிரிழப்போ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.