• Feb 12 2025

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை

Chithra / Feb 11th 2025, 2:36 pm
image

 

அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, பண்டாரவளை போன்ற பகுதிகளில் இருந்து மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதாலே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மரக்கறிகளின் விலையில் அதிகபட்சமாக ஒரு கிலோ கரட்டின் விலை 72 சதவீதத்தை எட்டியுள்ளது. 

தொடர்ந்து, ஒரு கிலோ முட்டைக்கோஸின் விலை 63 சதவீதம், லீக்ஸ், முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் விலை 10 முதல் 21 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது.

அத்துடன், ஒரு கிலோ கறி மிளகாயின் விலையும் 22 சதவீதம் அதிகரித்துள்ள அதே நேரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை 33 சதவீதம் குறைந்துள்ளது.

வெற்றிலையின் விலையும் 32 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் பச்சை மிளகாயின் விலை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை  அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, பண்டாரவளை போன்ற பகுதிகளில் இருந்து மரக்கறிகளின் வரத்து குறைவடைந்துள்ளதாலே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மரக்கறிகளின் விலையில் அதிகபட்சமாக ஒரு கிலோ கரட்டின் விலை 72 சதவீதத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து, ஒரு கிலோ முட்டைக்கோஸின் விலை 63 சதவீதம், லீக்ஸ், முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் விலை 10 முதல் 21 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது.அத்துடன், ஒரு கிலோ கறி மிளகாயின் விலையும் 22 சதவீதம் அதிகரித்துள்ள அதே நேரத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை 33 சதவீதம் குறைந்துள்ளது.வெற்றிலையின் விலையும் 32 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் பச்சை மிளகாயின் விலை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement