• May 04 2026

திடீரென பற்றியெரிந்த முச்சக்கர வண்டி - தப்பிய உயிர்கள்! ஹட்டனில் சம்பவம்

Chithra / May 4th 2026, 1:03 pm
image

மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் இன்று ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோய தோட்டப் பகுதியில் காலை சுமார் 10:15 மணியளவில் இடம்பெற்றது.

 

பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, இயந்திரத்தில் கோளாறை ஏற்படுத்தி தீப்பற்றி எரிந்துள்ளது.


இந்நிலையில், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டியின் இயந்திர பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

திடீரென பற்றியெரிந்த முச்சக்கர வண்டி - தப்பிய உயிர்கள் ஹட்டனில் சம்பவம் மஸ்கெலியா நகரில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோய தோட்டப் பகுதியில் காலை சுமார் 10:15 மணியளவில் இடம்பெற்றது. பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, இயந்திரத்தில் கோளாறை ஏற்படுத்தி தீப்பற்றி எரிந்துள்ளது.இந்நிலையில், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டியின் இயந்திர பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement