புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடியில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீயினால் வாடி முழுமைாக தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த போது, மீனவர்கள் தொழில் முடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னர் அந்த வாடியில் காவலாளி மட்டுமே இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது அந்த மீன்வாடி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதுடன்,
அருகில் உள்ளவர்கள் உடனடியாக அங்கு வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், தீயினால் குறித்த மீன்வாடி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன்,
அந்த வாடியில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கரையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திடீரென தீப்பிடித்து எரிந்த மீன்வாடி. பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கரை புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடியில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீயினால் வாடி முழுமைாக தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.சம்பவம் நடந்த போது, மீனவர்கள் தொழில் முடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னர் அந்த வாடியில் காவலாளி மட்டுமே இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன் போது அந்த மீன்வாடி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதுடன், அருகில் உள்ளவர்கள் உடனடியாக அங்கு வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.எனினும், தீயினால் குறித்த மீன்வாடி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அந்த வாடியில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கரையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.