• Oct 30 2024

பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு...! முற்றாக முடங்கிய மன்னார்..!samugammedia

Sharmi / Jul 28th 2023, 10:21 am
image

Advertisement

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றையதினம் மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர்.

அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.




பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு. முற்றாக முடங்கிய மன்னார்.samugammedia முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்றையதினம் மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர்.அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை. பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement