பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட ஒரு தலைவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விரைவில் இறுதித் தீர்மானத்திற்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவருடன் தொடர்ந்து செல்வதா அல்லது கட்சியில் இருந்து வேறு வேட்பாளரை முன்வைப்பதா என்பதை மொட்டுக் கட்சி எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அந்த முடிவின் மூலம் மொட்டுவில் உள்ள பலரும் கட்சியின் செயற்பாடுகளை அவர்களின் தனிப்பட்ட கருத்துப்படி முன்னெடுப்பதா இல்லையா என தீர்மானிப்பார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மினுவாங்கொடை உள்ளூராட்சி சபைக்குட்பட்ட 2000 பாடசாலை மாணவர்களுக்கு இன்று (30) பிரதேச சபை நிதியில் இருந்து பாடசாலை புத்தகங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவருக்கு ஆதரவு.அமைச்சர் பிரசன்ன வலியுறுத்து.samugammedia பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட ஒரு தலைவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விரைவில் இறுதித் தீர்மானத்திற்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவருடன் தொடர்ந்து செல்வதா அல்லது கட்சியில் இருந்து வேறு வேட்பாளரை முன்வைப்பதா என்பதை மொட்டுக் கட்சி எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அந்த முடிவின் மூலம் மொட்டுவில் உள்ள பலரும் கட்சியின் செயற்பாடுகளை அவர்களின் தனிப்பட்ட கருத்துப்படி முன்னெடுப்பதா இல்லையா என தீர்மானிப்பார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.மினுவாங்கொடை உள்ளூராட்சி சபைக்குட்பட்ட 2000 பாடசாலை மாணவர்களுக்கு இன்று (30) பிரதேச சபை நிதியில் இருந்து பாடசாலை புத்தகங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.