கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிகுளம் கடற்கரை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்ட விரோத மணல் அகழ்வு காரணமாகவும் அப்பகுதியில் பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள் அனைத்துமே மக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
குறித்த வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் இப்பகுதியில் அவசர தேவை கருதி நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இப்பகுதிக்கான பேருந்து சேவையும் தற்பொழுது இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்தனர்.
அது மட்டுமன்றி இப்பகுதியில் சுண்டிக்குளம் கடல் பகுதிக்கு மீன் தொழிலுக்காக செல்லும் மீனவ தொழிலாளர்கள் மற்றும் மீன் வியாபாரத்திற்காக செல்பவர்களும் தமது நாளாந்த ஜீவனோபாயத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் வந்து பார்வையிட்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலையில் சுண்டிகுளம் வீதிகள். அதிகாரிகள் பாராமுகம். மக்கள் விசனம். samugammedia கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிகுளம் கடற்கரை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்ட விரோத மணல் அகழ்வு காரணமாகவும் அப்பகுதியில் பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள் அனைத்துமே மக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.குறித்த வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் இப்பகுதியில் அவசர தேவை கருதி நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலையில் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.அதேவேளை, இப்பகுதிக்கான பேருந்து சேவையும் தற்பொழுது இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்தனர்.அது மட்டுமன்றி இப்பகுதியில் சுண்டிக்குளம் கடல் பகுதிக்கு மீன் தொழிலுக்காக செல்லும் மீனவ தொழிலாளர்கள் மற்றும் மீன் வியாபாரத்திற்காக செல்பவர்களும் தமது நாளாந்த ஜீவனோபாயத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் வந்து பார்வையிட்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.