தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரித்துள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு மற்றும் அதன் இடைக்கால மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இதன் மீதான தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் இதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட பின்னணியில் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒரு இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நிராகரித்துள்ளது.ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு மற்றும் அதன் இடைக்கால மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.அதன்படி இதன் மீதான தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் இதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட பின்னணியில் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.அதன்படி ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒரு இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.