• May 07 2026

வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்று

dorin / May 6th 2026, 6:13 pm
image

யாழில் படுகொலை செய்யப்பட்ட வித்யா வழக்கில் நீண்ட வருடங்களுக்குப் பின்னர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்  யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த  சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி  கொடூரமாகக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யப்பட்டார்.  

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

சந்தேக நபர்களில்  சுவிஸ் குமார் மற்றும் மேலும் மூவர் அடங்கியுள்ளனர். ஒவ்வொரு வழக்கிலும் சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா என்று  நாடு முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  

அதன்படி சுவிஸ்குமார் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கும் மரணதண்டனையை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

இந்தத் தீர்ப்பு, முன்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறது. அந்தத் தீர்ப்பில், சந்தேகநபர்கள்  குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் உள்ளிட்ட நால்வருக்கும் இன்று மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

வித்யா கொலை வழக்கில் ஒரு நியாயமான தீர்ப்பு வராதா என்று மாணவ சமுதாயம் மட்டுமன்றி நாடு முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு ஒட்டுமொத்த நாட்டிலும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்று யாழில் படுகொலை செய்யப்பட்ட வித்யா வழக்கில் நீண்ட வருடங்களுக்குப் பின்னர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்  யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த  சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி  கொடூரமாகக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யப்பட்டார்.  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.சந்தேக நபர்களில்  சுவிஸ் குமார் மற்றும் மேலும் மூவர் அடங்கியுள்ளனர். ஒவ்வொரு வழக்கிலும் சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா என்று  நாடு முழுவதும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  அதன்படி சுவிஸ்குமார் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களுக்கும் மரணதண்டனையை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு, முன்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறது. அந்தத் தீர்ப்பில், சந்தேகநபர்கள்  குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தான் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் உள்ளிட்ட நால்வருக்கும் இன்று மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வித்யா கொலை வழக்கில் ஒரு நியாயமான தீர்ப்பு வராதா என்று மாணவ சமுதாயம் மட்டுமன்றி நாடு முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இந்தத் தீர்ப்பு ஒட்டுமொத்த நாட்டிலும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement