• Feb 09 2025

வட்டுக்கோட்டையில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது!

Thansita / Feb 8th 2025, 10:42 pm
image

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குw;பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது ஐம்பதாயிரம் ரூபா பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.

 இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வந்த வேளையில் இவ்வாறு கொள்ளையடித்த, ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு.கொஸ்தாவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டுக்கோட்டையில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குw;பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது ஐம்பதாயிரம் ரூபா பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வந்த வேளையில் இவ்வாறு கொள்ளையடித்த, ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு.கொஸ்தாவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement