• Sep 20 2024

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம் - வெளியான வர்த்தமானி samugammedia

Chithra / Aug 10th 2023, 1:03 pm
image

Advertisement

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தற்காலிக பணி முறையாக சங்கத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஏழு பேர் கொண்ட குழுவின் தலைவராக மகேஷ் கம்மன்பில பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின்  தேர்தலை நடத்துவதற்கும் அதனை மேற்பார்வை செய்வதற்கும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின்  தேர்தலை நடத்துவதற்கு விசேட பொதுச் சபைக் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் குழுவை நியமிக்க வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம் - வெளியான வர்த்தமானி samugammedia இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.தற்காலிக பணி முறையாக சங்கத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த ஏழு பேர் கொண்ட குழுவின் தலைவராக மகேஷ் கம்மன்பில பெயரிடப்பட்டுள்ளார்.இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின்  தேர்தலை நடத்துவதற்கும் அதனை மேற்பார்வை செய்வதற்கும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின்  தேர்தலை நடத்துவதற்கு விசேட பொதுச் சபைக் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் குழுவை நியமிக்க வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement