• Sep 17 2024

அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலால் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்! samugammedia

Chithra / Aug 10th 2023, 1:02 pm
image

Advertisement

மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்கொள்ள 95 ஆயிரம் பணத்தை செலுத்துமாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்த மோடிக்கும்பலிடம் மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஏமாந்துள்ளார் வெளிநாட்டிலிலுள்ள பெண் ஒருவர் மட்டக்களப்பு பெண்ணுடன் சில காலம் நட்பு ரீதியாக பழகியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பெறுமதியான பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அனுப்புமாறும் கேட்டுள்ளார்.

அதனை நம்பிய இலங்கை பெண் முதற்கட்டமாக 95 ஆயிரம் ரூபாவை வெளிநாட்டு பெண் வழங்கிய கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த வெளிநாட்டு பெண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போதே அவர் ஏமாற்றப்பட்டுள்ள விடயத்தை அறிந்துள்ளார்.

அண்மைக் காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளது.

இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என ஒரு இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் ரூபா வரை இவ்வாறான மோசடி கும்பலுக்கு பலர் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர்.

இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலால் இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம் samugammedia மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்கொள்ள 95 ஆயிரம் பணத்தை செலுத்துமாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்த மோடிக்கும்பலிடம் மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஏமாந்துள்ளார் வெளிநாட்டிலிலுள்ள பெண் ஒருவர் மட்டக்களப்பு பெண்ணுடன் சில காலம் நட்பு ரீதியாக பழகியுள்ளார்.இந்நிலையில் அவருக்கு பெறுமதியான பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அனுப்புமாறும் கேட்டுள்ளார்.அதனை நம்பிய இலங்கை பெண் முதற்கட்டமாக 95 ஆயிரம் ரூபாவை வெளிநாட்டு பெண் வழங்கிய கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார்.அதன் பின்னர் குறித்த வெளிநாட்டு பெண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போதே அவர் ஏமாற்றப்பட்டுள்ள விடயத்தை அறிந்துள்ளார்.அண்மைக் காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளது.இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என ஒரு இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் ரூபா வரை இவ்வாறான மோசடி கும்பலுக்கு பலர் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர்.இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement