• Oct 11 2024

தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள்- கோவிந்தன் எம்.பி ஆதங்கம்..!

Sharmi / Sep 16th 2024, 3:42 pm
image

Advertisement

வடகிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருந்து உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்கின்ற ரீதியில் அவர்களுக்கு வாக்குச் சேர்க்கும் கைங்கரியத்தை செய்து கொண்டு தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையிலான பிரசார நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசார நடவடிக்கைகளில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,தமிழ் தேசிய கட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம்,வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தை என பல்வேறு இடங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் தேதி இந்த நாட்டில் நடைபெற இருக்கின்றது. கடந்த காலங்களில் 8 ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்று மக்களினால் தெரிவு செய்யப்பட்ட 6 ஜனாதிபதிகளும் இலங்கையின் பூர்விக குடிகளான தமிழ் மக்களை இரண்டாம் தர பிரதிகளாகவே இன்று வரை நினைத்துக் கொண்டு தங்களது ஆளுமைக்கு கீழ் தங்களது அடிமைகளாக வழிநடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் நீண்ட காலமாக அகிம்சை ஆயுத ரீதியிலே எமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் போராடியாக ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உயிர்களை இழந்து இருக்கின்றோம் பெருமளவான சொத்துக்கள் எங்களுடைய கலை கலாச்சாரங்களை எல்லாம் இழந்து இன்று நாங்கள் நிற்கதியான நிலையில் நடு சந்தியில் நிற்கும் ஒரு நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலையை மீண்டும் ஒருமுறை வெளி உலகத்திற்கு காட்டுவதற்காக தமிழ் தேசிய கட்சிகள் பொது அமைப்புகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் வடகிழக்கிலேயே ஒன்றிணைந்து ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலே ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கின்றோம்.

அந்த பொது வேட்பாளர் கூட இந்த மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்கள்.

நாங்கள் இந்த தேர்தலிலே ஜனாதிபதியாக வரக்கூடிய நிலை இல்லை என்பது எங்களுக்கும் தெரியும் இந்த நாட்டுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கும் தெரியும் இருப்பினும் நாங்கள் ஒற்றுமையாக எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுவதற்காக இந்த தேர்தலில் களமிறங்கியது மாத்திரம் அல்லாமல் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களும் 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு மிகவும் சிதைவடைந்த நிலையிலே ஒற்றுமை இன்மையாக காணப்படுகின்றனர்.

இந்த நிலைமை மாற வேண்டும் 2001 இல் முரண்பட்டு இருந்த அரசியல் கட்சிகள் போராட்ட இயக்கங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைந்ததைப் போன்று இந்த தேர்தலுடன் இந்த ஜனாதிபதி தேர்தல் ஒரு அடையாளமாக வைத்து ஒன்றிணைந்து எதிர்காலத்திலே எங்களுடைய தமிழ் மக்களுடைய ஒரே அரசியல் குரலாக ஒழிக்க வேண்டும்.

இந்த தேசத்திலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று கூறுவது மாத்திரமல்ல எங்களது பிரச்சினைகளை ஒரே குரலாக நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற காரணத்திற்காக இந்த தேர்தலில் பொது வேட்பாளரை களமிரங்கி இருக்கின்றோம்.

ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு கூட இந்த தேர்தலில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியத்தின்பால் தமிழ் தேசியத்தை நேசித்து தமிழில் தேசிய உணர்வாளர்களினால் வாக்களித்து இன்று பாராளுமன்றத்தில் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் கூட வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருங்கள் உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்கின்ற ரீதியில் அவர்களுக்காக வாக்கு சேர்ப்பதற்காக யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நாங்கள் உங்களுக்கு சேவகம் செய்யும் சேவகர்களாக தொடர்ந்து இருக்க வேண்டும் எங்களது மக்களை நீங்கள் அடிமையாக தொடர்ந்து வைத்திருப்பதை நாங்கள் விரும்புகின்றோம் என்கின்ற ரீதியில் அவர்களுக்கு வாக்குச் சேர்க்கும் கைங்கரியத்தை செய்து கொண்டு தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கு தமிழ் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பது மாத்திரமல்ல தமிழ் மக்கள் எதிர்வரும் 21-ம் திகதி ஒன்றிணைந்து நாங்கள் ஒரு குரலாக சங்கு சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட்டு எங்களது இலக்கை அடைவதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இது தொடர்பான ஒரு பரப்புரை பொதுக்கூட்டம் நாளைய தினம் கல்லடி மீன்னிசை பூங்கா கல்லடிப்பான இரக்கத்திலேயே எங்களுடைய தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பொது கட்டமைப்பை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் விளக்கமளித்து உரையாற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது.

நாளை பிற்பகல் 3 மணி அளவில் அனைவரும் அலைகடலென திரண்டு நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுவோம் எனவும் தெரிவித்தார்.



தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள்- கோவிந்தன் எம்.பி ஆதங்கம். வடகிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருந்து உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்கின்ற ரீதியில் அவர்களுக்கு வாக்குச் சேர்க்கும் கைங்கரியத்தை செய்து கொண்டு தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையிலான பிரசார நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசார நடவடிக்கைகளில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,தமிழ் தேசிய கட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம்,வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தை என பல்வேறு இடங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் தேதி இந்த நாட்டில் நடைபெற இருக்கின்றது. கடந்த காலங்களில் 8 ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்று மக்களினால் தெரிவு செய்யப்பட்ட 6 ஜனாதிபதிகளும் இலங்கையின் பூர்விக குடிகளான தமிழ் மக்களை இரண்டாம் தர பிரதிகளாகவே இன்று வரை நினைத்துக் கொண்டு தங்களது ஆளுமைக்கு கீழ் தங்களது அடிமைகளாக வழிநடத்திக் கொண்டு வருகின்றார்கள்.அந்த வகையில் நீண்ட காலமாக அகிம்சை ஆயுத ரீதியிலே எமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் போராடியாக ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உயிர்களை இழந்து இருக்கின்றோம் பெருமளவான சொத்துக்கள் எங்களுடைய கலை கலாச்சாரங்களை எல்லாம் இழந்து இன்று நாங்கள் நிற்கதியான நிலையில் நடு சந்தியில் நிற்கும் ஒரு நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.இந்த நிலையை மீண்டும் ஒருமுறை வெளி உலகத்திற்கு காட்டுவதற்காக தமிழ் தேசிய கட்சிகள் பொது அமைப்புகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் வடகிழக்கிலேயே ஒன்றிணைந்து ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலே ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கின்றோம். அந்த பொது வேட்பாளர் கூட இந்த மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்கள்.நாங்கள் இந்த தேர்தலிலே ஜனாதிபதியாக வரக்கூடிய நிலை இல்லை என்பது எங்களுக்கும் தெரியும் இந்த நாட்டுக்கு மாத்திரமல்ல உலகத்திற்கும் தெரியும் இருப்பினும் நாங்கள் ஒற்றுமையாக எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுவதற்காக இந்த தேர்தலில் களமிறங்கியது மாத்திரம் அல்லாமல் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களும் 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு மிகவும் சிதைவடைந்த நிலையிலே ஒற்றுமை இன்மையாக காணப்படுகின்றனர்.இந்த நிலைமை மாற வேண்டும் 2001 இல் முரண்பட்டு இருந்த அரசியல் கட்சிகள் போராட்ட இயக்கங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைந்ததைப் போன்று இந்த தேர்தலுடன் இந்த ஜனாதிபதி தேர்தல் ஒரு அடையாளமாக வைத்து ஒன்றிணைந்து எதிர்காலத்திலே எங்களுடைய தமிழ் மக்களுடைய ஒரே அரசியல் குரலாக ஒழிக்க வேண்டும்.இந்த தேசத்திலும் சர்வதேசத்திலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று கூறுவது மாத்திரமல்ல எங்களது பிரச்சினைகளை ஒரே குரலாக நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற காரணத்திற்காக இந்த தேர்தலில் பொது வேட்பாளரை களமிரங்கி இருக்கின்றோம்.ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு கூட இந்த தேர்தலில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் தேசியத்தின்பால் தமிழ் தேசியத்தை நேசித்து தமிழில் தேசிய உணர்வாளர்களினால் வாக்களித்து இன்று பாராளுமன்றத்தில் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் கூட வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருங்கள் உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்கின்ற ரீதியில் அவர்களுக்காக வாக்கு சேர்ப்பதற்காக யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நாங்கள் உங்களுக்கு சேவகம் செய்யும் சேவகர்களாக தொடர்ந்து இருக்க வேண்டும் எங்களது மக்களை நீங்கள் அடிமையாக தொடர்ந்து வைத்திருப்பதை நாங்கள் விரும்புகின்றோம் என்கின்ற ரீதியில் அவர்களுக்கு வாக்குச் சேர்க்கும் கைங்கரியத்தை செய்து கொண்டு தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அவர்களுக்கு தமிழ் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பது மாத்திரமல்ல தமிழ் மக்கள் எதிர்வரும் 21-ம் திகதி ஒன்றிணைந்து நாங்கள் ஒரு குரலாக சங்கு சின்னத்திற்கு மாத்திரம் புள்ளடியிட்டு எங்களது இலக்கை அடைவதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இது தொடர்பான ஒரு பரப்புரை பொதுக்கூட்டம் நாளைய தினம் கல்லடி மீன்னிசை பூங்கா கல்லடிப்பான இரக்கத்திலேயே எங்களுடைய தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பொது கட்டமைப்பை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் விளக்கமளித்து உரையாற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. நாளை பிற்பகல் 3 மணி அளவில் அனைவரும் அலைகடலென திரண்டு நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement