• Nov 23 2024

அடுத்த 1000 ஆண்டுக்கான அடித்தளத்தை இட்டது இந்தியா- பிரதமர் மோடி அறிவிப்பு!

Tamil nila / Sep 16th 2024, 6:59 pm
image

அடுத்த 1000 ஆண்டுக்கான அடித்தளத்தை இந்தியா தயார்செய்து வருவதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மத்திய அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களில் நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளையும் காரணிகளையும் கையாள முயற்சித்தோம்.

140 கோடி இந்தியர்கள் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதியளித்துள்ளனர்.

நாட்டின் பன்முகத்தன்மை, அளவு, திறன், செயல்திறன் ஆகியவை தனித்துவமானது.

அதனால் தான் உலகளாவிய பயன்பாட்டிற்கான இந்திய தீர்வுகளை நான் கூறுகிறேன்.

அயோத்தி மற்றும் 16 இடங்களை முன்மாதிரி சூரிய நகரங்களாக மேம்படுத்த பணியாற்றி வருகிறோம்

அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை தயார் செய்து வருகிறது. முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரவரிசையைத் தக்கவைக்க வேண்டும்.

21 ஆம் நூற்றாண்டில் இந்தியா சிறந்த விளங்கும் என்று இந்தியர்கள் மட்டும் இல்லை. உலகமே உணர்கிறது” என்றார்.

அடுத்த 1000 ஆண்டுக்கான அடித்தளத்தை இட்டது இந்தியா- பிரதமர் மோடி அறிவிப்பு அடுத்த 1000 ஆண்டுக்கான அடித்தளத்தை இந்தியா தயார்செய்து வருவதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,மத்திய அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களில் நாட்டின் விரைவான முன்னேற்றத்திற்காக அனைத்து துறைகளையும் காரணிகளையும் கையாள முயற்சித்தோம்.140 கோடி இந்தியர்கள் நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற உறுதியளித்துள்ளனர்.நாட்டின் பன்முகத்தன்மை, அளவு, திறன், செயல்திறன் ஆகியவை தனித்துவமானது.அதனால் தான் உலகளாவிய பயன்பாட்டிற்கான இந்திய தீர்வுகளை நான் கூறுகிறேன்.அயோத்தி மற்றும் 16 இடங்களை முன்மாதிரி சூரிய நகரங்களாக மேம்படுத்த பணியாற்றி வருகிறோம்அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை தயார் செய்து வருகிறது. முதலிடத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தரவரிசையைத் தக்கவைக்க வேண்டும்.21 ஆம் நூற்றாண்டில் இந்தியா சிறந்த விளங்கும் என்று இந்தியர்கள் மட்டும் இல்லை. உலகமே உணர்கிறது” என்றார்.

Advertisement

Advertisement

Advertisement