• Oct 19 2024

பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில்..? வெளியான வர்த்தமானி கலாசார அழிப்பு! – சபா குகதாஸ் விசனம் samugammedia

Chithra / Aug 3rd 2023, 2:09 pm
image

Advertisement

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்பு பட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிட்டமை கலாசார அழிப்பு என குற்றஞ்சாட்டிய வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வெள்ளரசு மரம் உள்ள இடமெல்லாம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் வெளியான வர்த்தமானியில் பல இடங்கள் தொல்லியல் துறைக்குரியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


இதன்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்பு பட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கும் சங்கமித்தை வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெள்ளரசு மரம் உள்ள இடம் எல்லாவற்றையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கிறதா?

குறித்த தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்


பௌத்த மயமாகும் சுழிபுரம் முருகன் கோயில். வெளியான வர்த்தமானி கலாசார அழிப்பு – சபா குகதாஸ் விசனம் samugammedia சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்பு பட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிட்டமை கலாசார அழிப்பு என குற்றஞ்சாட்டிய வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வெள்ளரசு மரம் உள்ள இடமெல்லாம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வெளியான வர்த்தமானியில் பல இடங்கள் தொல்லியல் துறைக்குரியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதன்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்பு பட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கும் சங்கமித்தை வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெள்ளரசு மரம் உள்ள இடம் எல்லாவற்றையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கிறதாகுறித்த தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

Advertisement

Advertisement

Advertisement