பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண், உயிர்காக்கும் அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொதுத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொத்துவில் எலிஃபண்ட் ராக் கடற்கரையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ளார்.
இதன்போதே 17 வயதான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த பெண் நீரில் மூழ்கியுள்ளார்.
குறித்த நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி மூழ்கியுள்ளார்.
பெண் நீரில் மூழ்குவதை பொத்துவில் பொலிஸ்பிரிவின் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அவதானித்தனர்.
அதனையடுத்து உயிர்காக்கும் அதிகாரிகளால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மீட்புக்குப் பிறகு அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், நேற்று வென்னப்புவவில் உள்ள சிந்திராத்ரியா, மோயா-கட்டேயில் உள்ள ஓடையில் குளித்தபோது கட்டானைச் சேர்ந்த 45 வயது நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அத்கலவைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்ட அந்த நபர், நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்ற குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் பெண்; உயிர்காக்கும் அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்பு பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண், உயிர்காக்கும் அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் பொதுத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொத்துவில் எலிஃபண்ட் ராக் கடற்கரையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ளார். இதன்போதே 17 வயதான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த குறித்த பெண் நீரில் மூழ்கியுள்ளார். குறித்த நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி மூழ்கியுள்ளார். பெண் நீரில் மூழ்குவதை பொத்துவில் பொலிஸ்பிரிவின் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் அவதானித்தனர். அதனையடுத்து உயிர்காக்கும் அதிகாரிகளால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். மீட்புக்குப் பிறகு அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று வென்னப்புவவில் உள்ள சிந்திராத்ரியா, மோயா-கட்டேயில் உள்ள ஓடையில் குளித்தபோது கட்டானைச் சேர்ந்த 45 வயது நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.அத்கலவைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்ட அந்த நபர், நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அண்மைக்காலமாக நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்ற குறிப்பிடத்தக்கது.