• Jan 26 2025

தைவானில் முதல் முறையாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை- மனித உரிமை குழுக்கள் கண்டனம்

Tharmini / Jan 19th 2025, 10:55 am
image

தைவானில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சான்சாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுவாங் லின் காய் (32) , 2013 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில் சட்ட அமைச்சரின் ஒப்புதலுடன், தைபே தடுப்பு மையத்தில் துப்பாக்கியால் சுட்டு இவர் மீது தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நீதித்துறை, ஹுவாங் ஈடுபட்ட குற்றம் மிகவும் கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளது.

இது போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை மிகவும் பொருத்தமான தண்டனை என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த மரண தண்டனை, தைவானின் மனித உரிமை பதிவிற்கு பெரும் களங்கம் என உலகளாவிய மனித உரிமை குழுக்கள் கண்டித்துள்ளன.

தைவானில் மரண தண்டனை இன்னும் சட்டப்பூர்வமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இதற்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

தைவானில் முதல் முறையாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை- மனித உரிமை குழுக்கள் கண்டனம் தைவானில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சான்சாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுவாங் லின் காய் (32) , 2013 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலி மற்றும் அவரது தாயை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது.இந்நிலையில் சட்ட அமைச்சரின் ஒப்புதலுடன், தைபே தடுப்பு மையத்தில் துப்பாக்கியால் சுட்டு இவர் மீது தண்டனை நிறைவேற்றப்பட்டது.நீதித்துறை, ஹுவாங் ஈடுபட்ட குற்றம் மிகவும் கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளது.இது போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை மிகவும் பொருத்தமான தண்டனை என்றும் வலியுறுத்தியுள்ளது.இந்த மரண தண்டனை, தைவானின் மனித உரிமை பதிவிற்கு பெரும் களங்கம் என உலகளாவிய மனித உரிமை குழுக்கள் கண்டித்துள்ளன.தைவானில் மரண தண்டனை இன்னும் சட்டப்பூர்வமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இதற்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது.மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement