• Dec 23 2024

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை

Chithra / Dec 23rd 2024, 8:52 am
image

 

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக அடிப்படையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக அரிசி இறக்குமதியின் போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மீண்டும் அரிசியின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்நிலையில் பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சில பிரதேசங்களில் இன்னும் பல வகையான அரிசிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை மூலம் இலங்கை சுங்கத்திற்கு இறக்குமதி வரியாக 430 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 

தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்ட 67,000 மெற்றிக் டன் அரிசி மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.


அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை  அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.தற்காலிக அடிப்படையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக அரிசி இறக்குமதியின் போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் மீண்டும் அரிசியின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.இந்நிலையில் பண்டிகைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சில பிரதேசங்களில் இன்னும் பல வகையான அரிசிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை மூலம் இலங்கை சுங்கத்திற்கு இறக்குமதி வரியாக 430 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்ட 67,000 மெற்றிக் டன் அரிசி மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement