• Dec 27 2024

அம்பாறையில் நத்தார் பண்டிகைக்காக உயரமான கிறிஸ்மஸ் மரங்கள்

Tharmini / Dec 25th 2024, 11:22 am
image

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அதிகளவான உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வர்ணங்களால் ஆன இவ்வாறான மரங்கள் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின் குமிழ்கள் நத்தார் மரங்கள் என்பன மக்களால் அதிகம் கொள்வனவு செய்யப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

இன்று (25) கொண்டாடப்படுகின்ற நத்தார், கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் என்பன இப்பகுதியில்  மும்முரமாக விற்பனையாகின்றன.

கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு  வியாபாரம் அதிகளவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாப்படும் பண்டிகையாக இருந்தாலும்  அனைத்து மக்களும் தமது வீட்டினை அழகுபடுத்துவதற்காக குறித்த அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.

இது தவிர நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர்  தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

பங்குத்தந்தை பேதுறு ஜீவராஜ்  தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.அத்துடன் தேவாலயத்தை சுற்றி இராணுவம்   பொலிசார்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் 

இவ்வாராதனையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக   வழிபாடுகளில்   பங்கு கொண்டிருந்தனர்.

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் (25) ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்று (25) மக்கள் நினைவு கூருகின்றனர். 

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் அவரது போதனைகளும் மனித வாழ்வின் மீட்பிற்கும், மனமாற்றத்திற்கும், எழுச்சிக்கும் வித்திட்டுள்ளன. 

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கிறிஸ்துவின் போதனைகள் வழி வகுத்துள்ளன. 

இந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அம்பாறையில் நத்தார் பண்டிகைக்காக உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அதிகளவான உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வர்ணங்களால் ஆன இவ்வாறான மரங்கள் காணப்பட்டதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின் குமிழ்கள் நத்தார் மரங்கள் என்பன மக்களால் அதிகம் கொள்வனவு செய்யப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.இன்று (25) கொண்டாடப்படுகின்ற நத்தார், கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் என்பன இப்பகுதியில்  மும்முரமாக விற்பனையாகின்றன.கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு  வியாபாரம் அதிகளவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் கிறிஸ்தவ மக்களால் கொண்டாப்படும் பண்டிகையாக இருந்தாலும்  அனைத்து மக்களும் தமது வீட்டினை அழகுபடுத்துவதற்காக குறித்த அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.இது தவிர நத்தார் நள்ளிரவு திருப்பலி கல்முனை திரு இருதயநாதர்  தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.பங்குத்தந்தை பேதுறு ஜீவராஜ்  தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.அத்துடன் தேவாலயத்தை சுற்றி இராணுவம்   பொலிசார்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வாராதனையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக   வழிபாடுகளில்   பங்கு கொண்டிருந்தனர்.உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் (25) ஆம் திகதியன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்று (25) மக்கள் நினைவு கூருகின்றனர். இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் அவரது போதனைகளும் மனித வாழ்வின் மீட்பிற்கும், மனமாற்றத்திற்கும், எழுச்சிக்கும் வித்திட்டுள்ளன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கிறிஸ்துவின் போதனைகள் வழி வகுத்துள்ளன. இந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அவை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement