தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் ஐனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவை வழங்க வேண்டுமென வணிகர் கழகத்தை சந்தித்த பொதுக்கட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய வணிகர் கழகமும் பொது வேட்பாளருக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில் நேற்று வணிகர் கழகத்திற்கு சென்ற பொது வேட்பாளர் அரியநேத்திரன் வணிகர் கழக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை வணிகர் கழகம் பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினரைச் சந்தித்த தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் ஐனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவை வழங்க வேண்டுமென வணிகர் கழகத்தை சந்தித்த பொதுக்கட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதற்கமைய வணிகர் கழகமும் பொது வேட்பாளருக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்து இருந்தது.இந்நிலையில் நேற்று வணிகர் கழகத்திற்கு சென்ற பொது வேட்பாளர் அரியநேத்திரன் வணிகர் கழக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.இதேவேளை வணிகர் கழகம் பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.