• Nov 25 2024

தமிழ் பொது வேட்பாளர் மூலோபாயம் பயனற்றது! - ஐரோப்பிய தூதுக்குழுவிடம் சம்பந்தன் தெரிவிப்பு!

Chithra / Jun 6th 2024, 10:04 am
image


 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது என்றும் தென்னிலங்கை தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணை வழங்கி வருகின்ற போதிலும் அதனை கருத்தில் கொள்ளாது ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.

எனவே ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை அளிப்பதற்கு மாறாக தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும்  இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் மூலோபாயம் பயனற்றது - ஐரோப்பிய தூதுக்குழுவிடம் சம்பந்தன் தெரிவிப்பு  ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது என்றும் தென்னிலங்கை தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக தமது நீண்டகால அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆணை வழங்கி வருகின்ற போதிலும் அதனை கருத்தில் கொள்ளாது ஆட்சியாளர்கள் செயற்படுகின்றனர்.எனவே ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகம் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தங்களை அளிப்பதற்கு மாறாக தமிழ் மக்கள் வழங்கும் ஆணையை உறுதிப்படுத்துமாறு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும்  இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement