ஈழத் தமிழர்களுக்காக பிரதமர் மோடியிடம் தமிழீழத்தை கேட்பேன் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மதுரை ஆதீனம் இவ்வாறு தெரிவித்தார்.
"இலங்கையில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.
அதன் காரணமாகத்தான் அவர்களால் மத்தியில் ஆட்சி செய்ய முடியவில்லை.
அதேநேரம், மோடி இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். மோடிக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைக்கிறேன். ஈழத்தில் இருக்கும் மக்களைப் பாதுகாக்க தமிழீழம் உருவாக வேண்டும்.
மோடி பிரதமரானதில் எனக்கு மிக மகிழ்ச்சி. சீமானின் வெற்றியால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சீமான் என்னிடம் தனி நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைக்க வேண்டும் எனக் கூறினார். அதனைத் தான் நானும் கூறுகிறேன் எனவும் தெரிவித்தார்.
தமிழீழம் உருவாக வேண்டும். மோடியிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை. ஈழத் தமிழர்களுக்காக பிரதமர் மோடியிடம் தமிழீழத்தை கேட்பேன் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.இந்நிலையில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மதுரை ஆதீனம் இவ்வாறு தெரிவித்தார்."இலங்கையில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. அதன் காரணமாகத்தான் அவர்களால் மத்தியில் ஆட்சி செய்ய முடியவில்லை.அதேநேரம், மோடி இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். மோடிக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைக்கிறேன். ஈழத்தில் இருக்கும் மக்களைப் பாதுகாக்க தமிழீழம் உருவாக வேண்டும்.மோடி பிரதமரானதில் எனக்கு மிக மகிழ்ச்சி. சீமானின் வெற்றியால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.சீமான் என்னிடம் தனி நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைக்க வேண்டும் எனக் கூறினார். அதனைத் தான் நானும் கூறுகிறேன் எனவும் தெரிவித்தார்.