• Oct 19 2024

மன்னாரை வந்தடைந்தது தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனி ! samugammedia

Tamil nila / May 13th 2023, 4:34 pm
image

Advertisement

தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலைக்கு நீதி கோரியும் அதே நேரம் முள்ளிவாய்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை ஊர்த்தி பவணி தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



நேற்றைய (12) தினம் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்கால் பேரவலம் இடம் பெற்று கொத்து கொத்தாக தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பித்த பவணி இன்று சனிக்கிழமை(13) இரண்டாம் நாள் வவுனியாவில் பவனியாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது.



இன்று மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதி மற்றும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது.



நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து அஞ்சலி செலித்தினர் அதனை தொடர்ந்து நினைவு ஊர்த்தியானது பவணியாக பேசாலை செல்வதுடன் மாலை ஐந்து மணியளவில் பேசாலை பகுதியிலும் அஞ்சலி நிகழ்வு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரை வந்தடைந்தது தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனி samugammedia தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலைக்கு நீதி கோரியும் அதே நேரம் முள்ளிவாய்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை ஊர்த்தி பவணி தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நேற்றைய (12) தினம் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்கால் பேரவலம் இடம் பெற்று கொத்து கொத்தாக தமிழ் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பித்த பவணி இன்று சனிக்கிழமை(13) இரண்டாம் நாள் வவுனியாவில் பவனியாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது.இன்று மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதி மற்றும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்களின் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது.நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து அஞ்சலி செலித்தினர் அதனை தொடர்ந்து நினைவு ஊர்த்தியானது பவணியாக பேசாலை செல்வதுடன் மாலை ஐந்து மணியளவில் பேசாலை பகுதியிலும் அஞ்சலி நிகழ்வு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement