சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கருத்து தெரிவிக்கையில்,
'இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமையச் செயற்படும் தமிழ் எம்.பிக்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க பொதுஜன பெரமுன ஒரு போதும் இடமளிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனும், கட்சியின் பேச்சாளரான சுமந்திரனும் எல்லை மீறிப் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசமைப்பை மீறி எதனையும் செய்ய முடியாது என்பதை அரசியலில் முதிர்ச்சி பெற்ற அவர்கள் இருவரும்புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக ஜனாதிபதியுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் நடத்திய பேச்சின் போது வெறும் 4 தமிழ் எம்.பிக்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்றும், இல்லையேல் தாம் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது ஒருபோதும் சாத்தியப்படாத விடயமாகும். சர்வதேசத்தை நம்பி ஏமாறாதீர்கள் என்று சம்பந்தன், சுமந்திரனிடம் சொல்லி வைக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் தமிழ் எம்.பிகள். பொதுஜன பெரமுன விடுத்த எச்சரிக்கை.samugammedia சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கருத்து தெரிவிக்கையில்,'இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கமையச் செயற்படும் தமிழ் எம்.பிக்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க பொதுஜன பெரமுன ஒரு போதும் இடமளிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனும், கட்சியின் பேச்சாளரான சுமந்திரனும் எல்லை மீறிப் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.அரசமைப்பை மீறி எதனையும் செய்ய முடியாது என்பதை அரசியலில் முதிர்ச்சி பெற்ற அவர்கள் இருவரும்புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக ஜனாதிபதியுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் நடத்திய பேச்சின் போது வெறும் 4 தமிழ் எம்.பிக்கள் மாத்திரம் கலந்துகொண்டுள்ளனர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்றும், இல்லையேல் தாம் சர்வதேசத்தை நாடுவோம் என்றும் சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது ஒருபோதும் சாத்தியப்படாத விடயமாகும். சர்வதேசத்தை நம்பி ஏமாறாதீர்கள் என்று சம்பந்தன், சுமந்திரனிடம் சொல்லி வைக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.