வடக்குஇகிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க்கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பானது, நாளை(21) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தரப்பினர், இமாலய பிரகடனம் ஒன்றை தயாரித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தனர்.
இந்நிலையில் இமாலய பிரகடனம் தொடர்பிலும் நாளையதினம் இடம்பெறும் சந்திப்பில் ஆராயப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் கட்சிகள்- ஜனாதிபதி நாளை முக்கிய சந்திப்பு.இமாலய பிரகடனம் தொடர்பிலும் கவனம்.samugammedia வடக்குஇகிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க்கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.குறித்த சந்திப்பானது, நாளை(21) பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தரப்பினர், இமாலய பிரகடனம் ஒன்றை தயாரித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தனர்.இந்நிலையில் இமாலய பிரகடனம் தொடர்பிலும் நாளையதினம் இடம்பெறும் சந்திப்பில் ஆராயப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.