• Apr 03 2025

18 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல்: பெண் உட்பட ஐவர் மீது வாள் வெட்டு.!

Chithra / Dec 20th 2023, 8:52 am
image

 

ஹப்புத்தளை பெரகலை சந்தியில் 18 பேர் கொண்ட இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரகல சந்தியில் உள்ள கடையொன்று தொடர்பான தகராறே இந்த மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெண் உட்பட ஐந்து பேர் வாள்வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

18 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல்: பெண் உட்பட ஐவர் மீது வாள் வெட்டு.  ஹப்புத்தளை பெரகலை சந்தியில் 18 பேர் கொண்ட இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பெரகல சந்தியில் உள்ள கடையொன்று தொடர்பான தகராறே இந்த மோதலுக்கு வழிவகுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பெண் உட்பட ஐந்து பேர் வாள்வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement