• Sep 20 2024

கேளிக்கையில் ஈடுபட்ட சிங்கள மக்களால் கொதித்தெழுந்த தமிழ் போராட்டக்காரர்கள் - தையிட்டியில் சம்பவம் samugammedia

Chithra / Nov 6th 2023, 10:52 am
image

Advertisement



யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை நிகழ்வில் பங்கேற்ற சிங்கள மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸ விகாரை கஜினமகா நிகழ்வு உற்சவ நிகழ்வில் நேற்றயதினம் இடம்பெற்றதுடன் இன்றைய பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியது.

இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த சிங்கள மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டிருந்தார்கள்.

அத்துடன் குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.

மேலும், குறித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  


கேளிக்கையில் ஈடுபட்ட சிங்கள மக்களால் கொதித்தெழுந்த தமிழ் போராட்டக்காரர்கள் - தையிட்டியில் சம்பவம் samugammedia யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை நிகழ்வில் பங்கேற்ற சிங்கள மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.திஸ்ஸ விகாரை கஜினமகா நிகழ்வு உற்சவ நிகழ்வில் நேற்றயதினம் இடம்பெற்றதுடன் இன்றைய பூஜை வழிபாடுகளானது காலை ஆரம்பமாகியது.இதன்போது சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.இதன்போது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த சிங்கள மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டிருந்தார்கள்.அத்துடன் குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது.மேலும், குறித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement