• Nov 19 2024

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும்! - சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

Chithra / Jun 10th 2024, 1:46 pm
image


தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

தமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தி அதிகமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற எமது வாக்குகளே முடிவைத் தீர்மானிக்கும்.

புத்திசாலித்தனமாகச் சிந்தித்து பிரதான மூன்று வேட்பாளர்களையும் குறைந்தபட்சம் ஒரு தீர்வுக்காவது இணங்கச் செய்ய வேண்டும்.

ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்த சூழல் தற்போது இல்லை என்பதால் தற்போதைய நிலைமைகளுக்கேற்ப அதனை ஜனநாயக சூழலாக மாற்றியமைத்துப் பயணிக்க வேண்டுமெனவும்,

மூலோபாயத் திட்டங்களுடன், மிகக் கடினமான முறையில் தென்னிலங்கைத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், எமது வாக்குப் பலத்தினைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு நாம் இறங்கி செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தி அதிகமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற எமது வாக்குகளே முடிவைத் தீர்மானிக்கும்.புத்திசாலித்தனமாகச் சிந்தித்து பிரதான மூன்று வேட்பாளர்களையும் குறைந்தபட்சம் ஒரு தீர்வுக்காவது இணங்கச் செய்ய வேண்டும்.ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்த சூழல் தற்போது இல்லை என்பதால் தற்போதைய நிலைமைகளுக்கேற்ப அதனை ஜனநாயக சூழலாக மாற்றியமைத்துப் பயணிக்க வேண்டுமெனவும்,மூலோபாயத் திட்டங்களுடன், மிகக் கடினமான முறையில் தென்னிலங்கைத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், எமது வாக்குப் பலத்தினைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement