• Nov 26 2024

தமிழர்களின் வாக்குகள் சஜித்துக்கே! ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. நம்பிக்கை..!!Samugammedia

Tamil nila / Dec 29th 2023, 11:15 pm
image

"ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள்."

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள். அந்த மக்களின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு - கிழக்கு மக்களின் அதிகூடிய வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்தன. எனினும், தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த இரட்டை நிலைப்பாடுகளால் அவரால் அந்தத் தேர்தலில் வெல்ல முடியாமல் போய்விட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அந்தக் குழப்பம் இருக்கமாட்டாது. சிங்கள மக்கள் தெளிவடைந்து விட்டார்கள். அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துவிட்டார்கள். அடுத்த தடவை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்ப்பார்கள். அவருக்கு அமோக வெற்றி கிடைக்கும்.

மொட்டுக் கட்சி வேட்பாளரோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரோ அல்லது ஜே.வி.பி. வேட்பாளரோ ஜனாதிபதியாக வருவதை நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள். சஜித் என்ற ஒரே தலைவரால் - ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே இந்த நாட்டுக்கு விடிவு கிடைக்கும்." - என்றார்.

தமிழர்களின் வாக்குகள் சஜித்துக்கே ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. நம்பிக்கை.Samugammedia "ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள்."இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,"2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள். அந்த மக்களின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கே கிடைக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு - கிழக்கு மக்களின் அதிகூடிய வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்தன. எனினும், தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த இரட்டை நிலைப்பாடுகளால் அவரால் அந்தத் தேர்தலில் வெல்ல முடியாமல் போய்விட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அந்தக் குழப்பம் இருக்கமாட்டாது. சிங்கள மக்கள் தெளிவடைந்து விட்டார்கள். அவர்கள் உண்மை நிலையைப் புரிந்துவிட்டார்கள். அடுத்த தடவை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்ப்பார்கள். அவருக்கு அமோக வெற்றி கிடைக்கும்.மொட்டுக் கட்சி வேட்பாளரோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரோ அல்லது ஜே.வி.பி. வேட்பாளரோ ஜனாதிபதியாக வருவதை நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள். சஜித் என்ற ஒரே தலைவரால் - ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே இந்த நாட்டுக்கு விடிவு கிடைக்கும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement